
அதற்கு அடுத்த வருடம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கொலு வைக்க முடியவில்லை. அதற்கு அடுத்த வருடம் எங்கள் மூத்த மகன் பிறந்தான். அவன் பிறந்த ஓரிரு மாதங்களில் நவராத்திரி வந்தது. அப்போது குழந்தையின் பொம்மைகளை எல்லாம் அடுக்கி கொலு வைத்தோம். அது மட்டுமில்லாமல் ஒரு remote கார் வாங்கி அதன் மேல் பாகத்தை அகற்றி அதன் மீது தேரைப் போன்று அலங்கரித்தோம். அதற்கு அடுத்தடுத்த வருடங்களும் அவ்வாறே இங்கே அமெரிக்காவிலேயே கிடைக்கும் பொம்மைகளை வைத்து நவராத்திரியைக் கொண்டாடினோம்.பிறகு 2006 ஆம் ஆண்டு எங்கள் மகள் பிறந்தாள். அவள் பிறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நவராத்திரி வந்தது. அப்போதும் நாங்கள் விடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதில்தான் இன்னும் நிறைய புதுமைகள் செய்தோம். மொத்தம் 5 படிகள் வைத்தோம்.

No comments:
Post a Comment