Saturday, October 11, 2008


முதல் படியில் சம்பிரதாயமாக விநாயகர் மற்றும் அம்மன் சிலைகளை வைத்தோம். இரண்டாவது படியில் தசாவதாரம் பொம்மைகளை வைத்தோம். இதில் என்ன விசேஷமென்றால் இந்த தசாவதார பொம்மைகள் அனைத்தும் play dough என்ற ஒரு வகை மாவினால் வீட்டிலேயே எந்த ஒரு அச்சும் (mold) இல்லாமல் கைகளாலேயே செய்யாப் பட்டவையாகும். இவையனைத்தையும் பிரசவத்துக்கும் சில நாட்களே இருந்த நிலையில் செய்து முடித்தேன். அதற்கு அடுத்த படியில் கஜேந்திர மோக்ஷம் இதற்கு எனது 2 வயது மகனின் பொம்மைகளைப் பயன் படுத்திக் கொண்டேன். 4 வது படியில் கயிலையில் இருந்து பார்வதி பரம சிவனிடமிருந்து ஆதி சங்கரர் 5 லிங்கங்களை பெற்று வரும் காட்சி இதுவும் play dough வினால் செய்யப்பட்டதுதான். பிறகு 5 வதாக ஒரு பார்பி பொம்மையை அம்மனாக அலங்கரித்து வைத்தோம். இதைப் பார்த்த அனைவரும் பாராட்டினார்கள். இது 2006 ஆம் வருடம் webulagam இல் இன்றைய மங்கை என்ற தலைப்பில் வெளி வந்த கட்டுரையில் பாராட்டி இருந்தார்கள் அது மட்டுமில்லாமல் அவர்கள் எனக்கு நல்ல முறையில் பிரசவம் ஆக வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனையும் செய்திருந்தார்கள். webulagam இணையதளத்தினர் மற்றும் வாசகர்களின் பிரார்த்தனையின் பலனாக அந்த பராசக்தியின் வடிவமாக எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

No comments: