
கடந்த 6 வருடங்களாக அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்ப் பெண் நான் . ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டில் நவராத்திரி பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்.எங்களுக்கு 2002 ஆம் ஆண்டு ஜுன் 21 ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் ஆன 10 நாட்களிலேயே என் கணவருடன் நான் அமெரிக்கா வந்துவிட்டேன். வந்த இரு மாதங்களிலேயே நவராத்திரி பண்டிகை வந்துவிட்டது. எங்களிடம் ஒரு பொம்மை கூட இல்லாத நிலையில் எல்லா சுவாமி படங்களையும் கம்ப்யூடரில் பிரிண்ட் எடுத்து அனைத்தையும் அழகாக வெட்டி சிறு சிறு அட்டையில் ஒட்டி வைத்திருந்தோம். (மேலே உள்ள படம்)






